அகட பாதாளத்திற்கு இறங்கிய தங்கத்தின் விலை! பெரு மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

0
143

நோய்த்தொற்று காரணமாக உலக தொழில் துறையை ஒட்டுமொத்தமாக முடங்கி கொண்டிருப்பதை அடுத்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியிருக்கிறார்கள். பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என்று பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் எல்லோரும் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள். இதன் காரணமாக, கடந்த சில மாதங்களில் ஆபரணத்தங்கம் 40 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன் பின்னர் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் என்று ஏறி ஏறி இறங்கியது.

இந்த நிலையில், நேற்றைய தினம் 22 காரட் தங்கம் ஒரு கிராம் 4 ஆயிரத்து 575 ஆகவும், 8 கிராம் ஆபரணத் தங்கம் 36 ஆயிரத்து 600 ஆகவும், இருந்தது. 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் 4 ஆயிரத்து 929 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூபாய் 39 ஆயிரத்து 432 விற்பனையானது.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 566 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 36 ஆயிரத்து 528 இருக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 22 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 920 ஆகவும், 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 39 ஆயிரத்து 360 ஆகவும், விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 74 ரூபாய் 70 காசாகவும், ஒரு கிலோ 74 ஆயிரத்து 700 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.