வரவிருக்கும் பேய்மழை! மிதக்கப்போகும் நான்கு மாவட்டங்கள்!

0
127

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அதோடு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாகவும், இன்றைய தினம் கோவை, நீலகிரி, தேனி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும், ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நாளைய தினம் கோவை, நீலகிரி, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே இருக்கும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதே போல நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.