ஜூலை 21 ஆம் தேதி வீடு தேடி வரும் வாக்களர் முகாம்!! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!!
நாடு முழுவதும் தலைவர்களை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் அட்டை மிகவும் அவசியமான ஒன்றாகும். நாடு முழுவது புதிய வாக்களர்களை சேர்த்தல் மற்றும் வாக்காளர் அட்டையில் திருந்தம் போன்றவை பணிகள் இந்திய முழுவதும் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய அரசு அதறக்கான பணிகளை சிறப்பு முகாம் மூலம் நடத்தி வருகிறது.
ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் அதிக அளவு சிரமத்தை சந்திகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தற்போது தேர்தல் ஆணையம் அடிக்கடி சிறப்பு முகாமை நடத்தி வருகிறார்கள். மேலும் ஒரு வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரி பார்ப்பது மற்றும் புதிய வாக்களர்களை சேர்த்தல் பணிகள் விரைவில் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனையடுத்து தேர்தல் ஆணையம் ஜூலை 21 ஆம் தேதி இந்த பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி பெறப்படட்ட விண்ணபங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த தகவல் படி தமிழ்நாட்டில் மட்டும் 6, 10, 390,316 வாக்காளர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகரின் இணைய பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வாக்களர் அட்டை சரிபார்ப்பு பணி வீடு தேடி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.