தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடைபெறுகின்ற ஒரு செய்தி குறிப்பில் அவசர மின்தடை சென்னையில் இன்று காலை 9 மணி முதல் ஒரு மணி வரையில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக, ஒரு சில இடங்களில் இன்று மின்வினியோகம் நிறுத்தப்படும். மதியம் ஒரு மணிக்குள் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மின் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மின்தடை ஏற்படும் பகுதிகளின் பெயர்கள் வருமாறு,
பட்டாபிராமன் பகுதியில் ராஜீவ் காந்தி நகர், லட்சுமி நகர், பாலாஜி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரையில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வேளச்சேரி கிழக்குப் பகுதியில் டான்சி நகர் அண்ணா நகர், அண்ணா நகர் விரிவு, இந்திரா காந்தி நகர், போன்ற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல புழல் பகுதியில் வள்ளுவர் நகர், பாரதிதாசன் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் சைதாப்பேட்டை ,ரங்கராஜபுரம், தாமஸ் நகர், போன்ற இடங்களில் இன்று ஒரு மணி வரையில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல போரூர் பகுதியில் விருகம்பாக்கம், போரூர், காரம்பாக்கம், மாங்காடு, குன்றத்தூர், பாரிவாக்கம், பனிமலர் கல்லூரி, நசரத்பேட்டை திருமுடிவாக்கம், அதேபோல திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் தடைப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல கிண்டி பகுதியில் மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், டிஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. கேகே நகர் பகுதியில் அசோக்நகர், கேகே நகர், வடபழனி அழகிரிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதோடு அம்பத்தூர் பகுதியில் புலியம்பெடு சூசை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரையில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.