வீடு தேடி வரும் டோக்கன்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

0
205

நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் ஒன்று சேர்வதை தவிர்ப்பதற்காக நிவாரணத்தொகை வழங்குவதற்கான நோக்கங்கள் வழங்கப்படுவது மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது நிவாரணத் தொகை வழங்குவதற்கு டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதன்படி இன்று முதல் டோக்கன் வினியோகம் ஆரம்பிக்க இருக்கிறது. அத்துடன் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கும் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நோய்த்தொற்று நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். அதன்படி மே மாதம் அந்த நிவாரணத் தொகையை முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இம் மாதம் மூன்றாம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளன்று அந்த நிவாரணத் தொகையின் இரண்டாவது தவணை வழங்கப்படும் என்று முன்பே அறிவித்திருந்தார். நாளை மறுநாள் நிவாரண தொகை கொடுக்க இருக்கும் நிலையில், இன்று அதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நியாய விலை கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று டோக்கன்களை விநியோகம் செய்ய இருக்கிறார்கள். குறிப்பிட்ட சமயத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், வரும் 5-ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அதே நேரம் துவரம் பருப்பு மற்றும் ஒரு சில காரணங்களால் ஜூன் மாதம் 7ஆம் தேதியன்று நியாயவிலை கடைகளில் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல முதல்வர் நிவாரண தொகை பெறாதவர்கள் இந்த மாதம் வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது