Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்டதாரிகளுக்கு ரயில் நிறுவனத்தில் ‘இளநிலை உதவியாளர்’ பணி.. இன்று கடைசி நாள்!! சீக்கிரம் அப்ளே பண்ணுங்க ப்ரண்ட்ஸ்!

பட்டதாரிகளுக்கு ரயில் நிறுவனத்தில் ‘இளநிலை உதவியாளர்’ பணி.. இன்று கடைசி நாள்!! சீக்கிரம் அப்ளே பண்ணுங்க ப்ரண்ட்ஸ்!

மத்திய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்துறை மற்றும் ஆலோசனை நிறுவனமான ‘ரயில் இந்தியா தொழில்நுட்ப பொருளாதார சேவை’ நிறுவனத்தில் (ரைட்ஸ்) காலியாக உள்ள ‘இளநிலை உதவியாளர்’ பணிக்கான 16 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: ரயில் இந்தியா தொழில்நுட்ப பொருளாதார சேவை

பணி: இளநிலை உதவியாளர்

காலி பணியிடங்கள்: தற்பொழுது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இளநிலை உதவியாளர் பணிக்கென காலியாக உள்ள 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதி: இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இருக்கும் நபர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இளநிலை உதவியாளர் பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட வேண்டும்.பிறகு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.கூடுதல் தகவல் பெற மற்றும் விண்ணப்பிக்க https://rites.com என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600 மற்றும் எஸ்சி,எஸ்டி,மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று அதாவது செப்டம்பர் 4 கடைசி தேதி ஆகும்.

Exit mobile version