Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடடா! லோகேஷ் கனகராஜிடம் இளைய தளபதி காமிச்ச ரியாக்சன்! ஷாக்கான படக்குழுவினர்

தமிழ்நாட்டில் தற்போது அனைத்து திரையரங்குகளும் கொரோனாவால்  மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு  தயாராக  உள்ளது.

இளைய தளபதி விஜய்யின் அடுத்த படமான மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ்  இயக்கியுள்ளார். இவர் இயக்கிய  திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் திரைப்படத்தை படக்குழுவினர் பார்த்துள்ளனர். அப்பொழுது திரைப்படத்தை முழுமையாக பார்த்த தளபதி விஜய் படம் நன்றாக வந்துள்ளது  என்னும் பரவசத்தில் இயக்குனர் லோகேஷ்   கனகராஜ்  கட்டியணைத்து   தன் வாழ்த்துக்களை தெரிவித்தார் .

தளபதி விஜய் வேறு படங்களில் நடித்த கதாபாத்திரங்களை விட இந்த படத்தில் புதுமையான கதாபாத்திரம் அமைந்துள்ளது மேலும் தளபதி விஜயுடன் சேர்ந்து விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மாஸ்டர் திரைப்படம் நன்றாக வந்துள்ள  உற்சாகத்தில் தளபதி விஜய் லோகேஷ் உடன்  மற்றொரு திரைப்படம் இணைந்து செய்யலாம் என்று உறுதி கூறியுள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் OTTயில் வெளியிட்டாலும் பார்க்க தயாராக இருக்கின்றனர்.

 

Exit mobile version