வெறும் 10 செகன்ட் போதும்! மூன்று நாடுகளுக்கு செல்ல முடியும்! அது எப்படி? 

0
227
Just 10 seconds is enough! Can go to three countries! How is that?
அனைவருக்கும் சுற்றுலா என்றாலே பிடிக்கும். அதுவும் உள்நாட்டுச் சுற்றுலாவை விட வெளிநாட்டு சுற்றுலா செல்ல வேண்டும் என்றுதான் பலரும் விரும்பி வருகிறார்கள். வாழ்க்கையில் ஒரு முறையாவது வெளிநாடு செல்ல வேண்டும் அதுவும் சுற்றுலாவிற்கு செல்ல வேண்டும் என்று பலரும் ஆசைபடுகிறார்கள்.
வெளிநாட்டு சுற்றுலாவிற்கு செல்வதற்கு திட்டம் எல்லாம் போட்டு விட்டாலும் அதற்குண்டான பட்ஜெட்டை பார்க்கும் பொழுது அனைவருக்கும் அந்த ஆசை அப்படியே புதைந்து விடுகின்றது. ஒரு. வெளிநாட்டு சுற்றுலாவிற்கு செல்ல வேண்டும் என்பதை கூட நிறைவேற்ற முடியாமல் இருக்கும் நம்மால் 10 செகன்ட்டில் மூன்று வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அது உண்மைதான். நாம் 10 செகன்ட்டுக்குள் மூன்று நாடுகளுக்கு செல்ல முடியும் அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசைப்படும் நபர்கள் அனைவரும் ஸ்விட்சர்லாந்து செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கும். இந்த ஸ்விட்சர்லாந்து நாட்டில் தான் 10 செகன்ட்டில் மூன்று நாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு நமக்கு கிடைக்கின்றது.
அதாவது ஸ்விட்சர்லாந்து நாட்டில் பேசல் நகரம் அமைந்துள்ளது. இந்த பேசல் நகரில் உள்ள மீடியேவேல் ஓல்ட் டவுன் என்ற இடத்திற்கு சென்றால் நாம் 10 செகன்ட்டில் மூன்று நாடுகளுக்கு செல்ல முடியும். அதாவது இந்த மீடியவேல் ஓல்ட் டவுன் என்ற பகுதியில் ட்ரீலான்டெரெக் என்ற நினைவுச் சின்னம் அருகே மூன்று நாடுகளின் எல்லைகள் அமைந்துள்ளது. இதன் மூலமாக நாம் 10 செக்கன்டுக்குள் மூன்று நாடுகளுக்கு சென்று வர முடியும்.
அதாவது ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளின் எல்லைப் பகுதி இந்த பேசல் நகரில் உள்ள மீடியவேல் ஓல்ட் டவுனில் இருக்கின்றது. எனவே நாம் இங்கு சென்றால் 10 செகன்டுக்குள் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு சென்று வர முடியும். என்னதான் எல்லைப் பகுதியாக இருந்தாலும் இந்த இரண்டு பகுதிகளுக்குள் அதாவது ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் எல்லைக்குள் செல்ல நாம் விசா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.