ஜஸ்ட் 5 மினிட்ஸ் போதும்.. உங்கள் பெயரில் இருக்கும் போலி சிம்கார்டை கண்டறிய இந்த லிங்க் டச் பண்ணுங்க!!

0
118
Just 5 minutes is enough.. Touch this link to find fake SIM card in your name!!

நம் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக பண மோசடி செயல்கள் அதிகரித்து வருவதால் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.பண மோசடிக்கு பேருதவியாக இருப்பது சிம் கார்டுகள் தான்.போலி சிம் கார்டு பயன்படுத்தி தொடர் குற்றச்செயல்கள் நடைபெறுவதால் சிம் கார்டு தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தனி நபர் ஒருவர் அதிகபட்சம் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற டெலிகாம் சட்டம் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது.9 சிம் கார்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் அபராதத்துடன் சிறைத்தண்டை வழங்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்தது.

இந்நிலையில் தங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டு இருக்கிறது? தங்களுக்கு தெரியாத சிம் கார்டை பிளாக் செய்வது குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் தங்கள் பெயரில் இருக்கும் போலி சிம் கார்டு எண்ணை பிளாக் செய்திடலாம்.முதலில் http://tafcop.sancharsaathi.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.

பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சா குறியீடு மற்றும் மொபைல் எண்ணை என்டர் செய்யவும்.அதன் பின்னர் மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை என்டர் செய்து உள் நுழைந்தால் உங்கள் பெயரில் இருக்கும் சிம் கார்டு எண்கள் திரையில் தோன்றும்.

அதில் நீங்கள் கேள்விப்படாத எண் இருந்தால் அதை பிளாக் செய்யவும் ஆப்ஷன் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும்.அதற்கு முன்னர் உங்கள் பெயரில் இருக்கும் போலி சிம் கார்டு குறித்து அங்குள்ள போர்ட்டலில் புகார் தெரிவிக்கவும்.பிறகு தேவையற்ற எண்களை பிளாக் செய்வதன் மூலம் மோசடிகளில் சிக்குவது தவிர்க்கப்படும்.