ஜஸ்ட் ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும்! பிளட் சுகர் லெவல் கன்ட்ரோலுக்கு வந்திடும்!!

0
179
Just a spoonful of fenugreek is enough! Blood sugar level will come under control!!

நம் சமையலில் பயன்படுத்தப்படும் உணவுப்பொருளான வெந்தயம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.அது மட்டுமின்றி உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.வெந்தயத்தில் இருக்கின்ற நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்கிறது.

இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் முக்கிய நோயாக சர்க்கரை உள்ளது.இரத்தத்தில் சர்க்கரையின் சமநிலை மாறும் போது நீரிழிவு நோயின் தாக்கம் ஏற்படுகிறது.இந்த இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயத்தில் டீ போட்டு குடிக்கலாம்.

வெந்தயம் அதிக கசப்பு நிறைந்த பொருள் என்பதால் இதை முளைகட்டி பொடியாக்கி பிறகு கொதிக்க வைத்து அருந்தலாம்.வெந்தயத்தில் இருக்கின்ற கால்சியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ்,வைட்டமின்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு பல நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது.

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம்
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 10 கிராம் வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற விடவும்.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

இந்த டீயில் தேன்,சர்க்கரை போன்ற எந்தஒரு இனிப்பு பொருட்களையும் சேர்க்கக் கூடாது.வெந்தய டீ செரிமானப் பிரச்சனையை தடுக்கிறது.அது மட்டுமின்றி இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க வெந்தய டீ உதவுகிறது.