இக்கால கட்ட இளம் வயதினருக்கு மீசை மட்டும் தாடி அதிக அளவில் இருக்க வேண்டும் என விரும்புவர். அதற்காக இணையத்தில் விற்கும் பல தரப்பட்ட சீரம் போன்றவற்றை உபயோகிப்பர். ஆனால் அவ்வாறு உபயோகிப்பது எதுவும் பயனளிக்காது. அவ்வாறு இருப்பவர்கள் இந்த வீட்டு வைத்திய முறையை பின்பற்றலாம்.
டிப்ஸ்1
விளக்கெண்ணை மற்றும் கருஞ்சீரக எண்ணெய்:
முதலில் நமது முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டும்.
அதற்கு ஒரு பாத்திரத்தில் நீரை சேர்த்து அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின்பு அடுப்பை அணைத்துவிட்டு அந்த கொதித்த நீரின் மேல் ஆவி பிடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொழுது நமது முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அடைத்திருக்கும் துளைகள் உள்ளிட்டவை நீங்கும்.
இவ்வாறு செய்ததும் துணி வைத்து முகத்தை ஒத்தி எடுக்க வேண்டும்.
பின்பு விளக்கெண்ணெய் வைத்து முடி வளர வேண்டும் என்ற இடத்தில் மசாஜ் செய்யலாம்.
முதல் நாளில் விளக்கெண்ணெய் மற்றொரு நாளில் கருஞ்சீரக எண்ணெய் வைத்து மசாஜ் செய்யலாம்.
இரவு முழுவதும் அப்படியே விட்டு தூங்கி விட வேண்டும்.
மறுநாள் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்து வர அதிவிரைவிலேயே தாடி மீசை வளர்வதை பார்க்கலாம்.
டிப்ஸ் 2
வெங்காயத்தை நன்றாக நசுக்கி அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்பு இதில் இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டாம்.
இந்த மூன்றும் கலந்த கலவையை தினந்தோறும் இரவு நேரத்தில் மீசை தாடி வளரும் இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
உங்க காலையில் வழக்கம் போல் முகத்தை கழுவி வர நல்ல மாற்றத்தை காணலாம்.
டிப்ஸ் 3
தக்காளி ஜுஸ் 2 ஸ்பூன்
விளக்கெண்ணெய் 1 ஸ்பூன்
விட்டமின் இ காப்ஸ்யூல் 1
மூன்றையும் நன்றாக கலந்து மீசை தாடி வளரும் இடத்தில் மசாஜ் செய்து வரலாம்.
மேற்கொண்டு உணவு பழக்க வழக்கத்தில் டெஸ்டோ சிரான் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக மாமிசம், விட்டமின் டி உள்ள பொருட்கள் முக்கியமான ஒன்று.