Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நான்கு வேளை இதை மட்டும் தடவுங்கள்!! ஒரே நாளில் நெஞ்சு சளி கரைந்து விடும்!

just-apply-this-four-times-chest-mucus-will-dissolve-in-one-day

just-apply-this-four-times-chest-mucus-will-dissolve-in-one-day

நான்கு வேளை இதை மட்டும் தடவுங்கள்!! ஒரே நாளில் நெஞ்சு சளி கரைந்து விடும்!

கைக்குழந்தை முதல் பெரியவர்கள் வரை நெஞ்சு சளி பிரச்சனை உள்ளது.கைக்குழந்தைகளும் நெஞ்சு சளியால் அவதிப்படுகிறார்கள். மருந்து மாத்திரைகளில் இவை தற்காலிகமாக குணமடைந்தாலும் அவை முழுதும் கரைந்து வெளியேறாத வரை அது மார்பு சளியை உண்டாக்கவே செய்யும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் நெஞ்சு சளியால் அவதிப்படுகிறார்கள். இதை எளிதாக நீக்கும் பாட்டி கால வைத்திய முறை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

• தேங்காய் எண்ணெய்
• பச்சைக் கற்பூரம்
• வெற்றிலை
• கற்பூரவள்ளி
• துளசி

பயன்படுத்தும் முறை:

1. வாணலியில் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் சூடேறியதும் அதில் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
2. சூடு ஆறியதும் நெற்றி, மூக்கு, முதுகு பகுதி, கழுத்திலிருந்து மார்பு வரை என்று இலேசாக தடவுங்கள்.
3. இதனை தினமும் 4 ல் இருந்து 6 முறை இதை தடவி வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி எவ்வளவு கெட்டியாக இருந்தாலும் கரைந்து வெளியேறிவிடும்.
4. வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி அதை விளக்கில் காண்பிக்க வேண்டும்.
5. வெற்றிலை சூடேறும் போது பொறுக்கும் சூட்டில் குழந்தையின் மார்பில் பற்று போட வேண்டும். இவ்வாறு செய்து வருகையில் குழந்தையின் நெஞ்சு சளி முழுமையாக குணமாகும். மேலும் கருப்பு வெற்றிலை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
6. துளசி, வெற்றிலை, கற்பூரவல்லி மூன்று இலைகளையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
7. பெரியவர்களுக்கு தரும் போது மிளகு சேர்த்துக் கொள்ளலாம். பிள்ளைகளுக்கு பால் தரும் போது சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து கொடுக்கலாம்.

இந்த வைத்தியத்தை முழுமையாக செய்து வருகையில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் பிரச்சனையான நெஞ்சு சளி முற்றிலும் குணமாகும்.

Exit mobile version