சேற்றுப் புண்ணால் ஒரே அரிஇதை உடனடியாக சரி செய்ய இதை மட்டும் தடவுங்கள்!!

0
76
Just apply this to get rid of a sore throat instantly!!

கால்களில் சிறு காயங்கள் ஏற்பட்டாலே நடப்பதற்கு சிரமமாக இருக்கும்.அப்படி இருக்கையில் சேற்றுப்புண் உண்டானால் அவை தாங்கிக் கொள்ள முடியாத எரிச்சல் மற்றும் வலியை கொடுக்கும்.

கால்களை நிலத்தில் வைக்க முடியாத அளவிற்கு விரல்கள் வீங்கிவிடும்.இந்த சேற்றுப்புண் புண்களை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை முயற்சித்து பலன் பெறுங்கள்.

தீர்வு 01:

1)வேப்பிலை – கால் கைப்பிடி
2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
3)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

முதலில் கால் கைப்பிடி அளவு வேப்பிலையை உரலில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் கால் தேக்கரண்டி சமையல் மஞ்சள் தூள் கலந்து விடுங்கள்.

பிறகு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை அதில் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்யுங்கள்.பிறகு கால்களை கழுவிவிட்டு இந்த பேஸ்ட்டை பூசுங்கள்.

இரவில் இதை செய்கிறீர்கள் என்றால் காலையில் எழுந்து கால்களை கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் கூடிய விரைவில் சேற்றுப்புண் ஆறிவிடும்.

தீர்வு 02:

1)கற்றாழை மடல் – ஒன்று
2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
3)வேப்பம் பட்டை பொடி – அரை தேக்கரண்டி

முதலில் கற்றாழை மடல் ஒன்றை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் பிரித்து எடுக்கவும்.இதை அரைத்து கிண்ணத்தில் போட்டு கொள்ளுங்கள்.

அடுத்து அதில் அரை தேக்கரண்டி வேப்பம் பட்டை பொடி சேர்த்துக் கொள்ளுங்கள்.வேப்பம் பட்டை பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

பிராகி அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.அவ்வளவு தான் சேற்றுப்புண்ணை குணமாக்கும் மருந்து தயார்.

இந்த மருந்தை சேற்றுப்புண் மீது அப்ளை செய்து சில மணிநேரம் காய வைக்கவும்.பிறகு வெது வெதுப்பான நீரில் கால்களை சுத்தப்படுத்திக் கொள்ளவும்.இதுபோல் தொடர்ந்து செய்து வந்தால் சேற்றுப்புண் ஆறிவிடும்.