சற்றுமுன்: அச்சுறுத்தும் புதுவகை வைரஸ்!! மீண்டும் ஊரடங்கா.. தமிழக மக்களுக்கு கடும் எச்சரிக்கை!!
கொரோனா தொற்றானது மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மக்களை பாதித்து வந்த நிலையில் அதிலிருந்து வெளிவந்து தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்த சூழலில் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்புளுயன்சா H3N2 என்ற புதியவகை வைரஸ் பரவத் தொடங்கி தற்போது தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் தற்சமயத்தில் எங்கு பார்த்தாலும் காய்ச்சல் சளி என்று அந்த வைரசால் பாதிப்படைந்து மக்கள் பெருமளவு அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவேஇந்த புதிய வகை வைரஸ் தாக்கத்தினால் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் தமிழக அரசு இதற்கென்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுவதாக கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இதுகுறித்து சோதனை செய்ததில், இந்த தொற்றானது முதியவர் மற்றும் 15 வயது கீழ் உள்ள சிறியவர்களுக்கு அதிக அளவு பாதிப்பை உண்டாக்குவதாகவும் சுவாச கோளாறு பிரச்சனை உள்ளவர்களுக்கு விரைவில் இந்த தொற்று வரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். அதுமட்டுமின்றி முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதுடன் வெளியிடங்களுக்கு சென்று வந்தால் கைகளை சுத்தம் செய்வதன் மூலம் இத்தொற்றியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.மேலும் தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பாதிப்பானது தீவிரம் காட்டி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து மாநிலங்கள் தோறும் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரிக்க நேர்ந்தால் மீண்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு விட அதிக வாய்ப்புக்கள் உள்ளதோடு கட்டுப்பாடுகளை தீவீரப்படுத்தலாம்.குறிப்பாக அதிகளவு பாதிக்கப்படும் மாநிலங்கள் அதனை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் அதிக வாய்ப்புக்கள் உள்ளது.