தீபாவளி போனஸ் நீண்ட காலமாகவே தனியார் துறை ஊழியர்களுக்கு மட்டுமே என இருந்த நிலையில் தற்பொழுது அரசு துறை ஊழியர்களுக்கும் சிறப்பு போனஸ் என மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு “தீபாவளி போனஸ்” வழங்குவது வழக்கமான ஒன்றாகும்.
இதனை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் என்ற புது விதமான அறிக்கை வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 23,000 உற்பத்தி சாராத அரசு ஊழியர்களுக்கு தலா ரூ.7,000 தீபாவளி சிறப்பு போனஸ் கிடைக்கும் என அறிவித்துள்ளார்.
தீபாவளி போனஸ் எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், சராசரி ஊதியத்தை 30.4 ஆல் வகுத்து, அதை 30 நாட்களால் பெருக்குதல் மூலம் கணக்கிடலாம். உதாரணமாக, மாதம் ரூ.7000 சம்பாதிக்கும் நபருக்கு, தீபாவளி போனஸ் 7,000 x 30.4 = ரூ. 6,908 ஆக இருக்கும். மேலும் அரசு யாருக்கெல்லாம் போனஸ் என்று முக்கிய நிபந்தனை ஒன்று கூறியுள்ளது, அது என்னவென்றால் ஒரு நிதியாண்டில் குறைந்தது 6 மாதங்களுக்கு தொடர்ச்சியான சேவையை வழங்கி இருக்க வேண்டும்.
ஒரு வருடத்திற்கும் குறைவாக வேலை செய்த ஊழியர்களுக்கு, விகிதாச்சார அடிப்படையில் பகுதி போனஸ் வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள தீபாவளி போனஸ் ஊழியர்களுக்கு பெரு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த போனஸ் மத்திய துணை ராணுவப் படைகள், ஆயுதப் படை பணியாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கிடைக்கும்.