இந்த 1 மட்டும் பண்ணுங்கள் அரை மணி நேரத்தில் உங்கள் தொப்பை குறையும்!!
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது அவசியம். இந்த காலகட்டத்தில் மாறுபட்ட உணவு பழக்க வழக்கத்தால் சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. அதுமட்டுமின்றி இக்கால இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றிலிருந்து மீள வேண்டும் என்றால் உடற்பயிற்சி தியானம் போன்றவற்றை தினம் தோறும் பின்பற்ற வேண்டும்.
அந்த வகையில் இந்த பதிவில் வரும் மூன்று பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு மற்றும் வயிற்றை சுற்றியுள்ள சதைகள் குறைந்து பிட்டாக மாரிவிடுவீர்கள்.
பேக் எக்ஸ்டென்ஷன்:
தரையில் கீழே குப்புற படுக்க வேண்டும். பின்பு கைகளை ஊன்றி கால்கள் தரையில் இருக்கும் படி முதுகை மட்டும் மேலே தூக்க வேண்டும். அவர் தூக்கி விட்டு மூச்சை உள்வாங்கி விட வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் நமது முதுகு தண்டு ஆனது நேராகி சுற்றியுள்ள தசைகள் அனைத்தும் பிடித்தமாகும்.
இரண்டாவதாக அப்பர் ஆப்
கன்ட்ரோல்:
இந்தப் பயிற்சியில் தரையில் நேராக படுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு முட்டியை மட்டும் மடக்க வேண்டும்.
தலை மற்றும் உடம்பு பகுதி ஆனது முட்டையை வந்து தொடும் படி முன்னும் பின்னும் ஆக சென்று வர வேண்டும்.
இவ்வாறு செய்து வர வயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகள் மூலச் சதை போன்றவை குறையும்.
குறிப்பாக தொடையில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து பிட்டாக காணப்படும்.
மூன்றாவதாக கூழ் ரிலாக்ஸ்:
கை மற்றும் கால்களை நீட்டி அப்படியே மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு கைகளை மட்டும் பின்னாடி வைத்துக் கொண்டு மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதால் மன அமைதி கூறுவதோடு முதுகு மற்றும் இடுப்பு போன்றவற்றில் உண்டாகும் வலி நிவர்த்தி அடையும்.
இந்த மூன்று பயிற்சிகளும் தினந்தோறும் காலை நேரத்தில் செய்து வர ரத்த ஓட்டம் ஆனது உடலில் சீராக காணப்படும்.