தூங்குவதற்கு முன் இதை மட்டும் செய்யுங்கள் உங்களுக்கு சைனஸ் தொல்லையே இருக்காது!!
சைனஸ் பிரச்சனையானது தற்பொழுது அனைவருக்கும் இருக்கும் ஒன்றாக மாறிவிட்டது. மூக்கில் உள்ள சைனஸ் என்ற காற்று பைகளில் நாம் சுவாசிக்கும் பொழுது பாக்டீரியா தூசி போன்றவையால் தொற்று உண்டாகும்.இது நமக்கு அலர்ஜியாக மாறிவிடுகிறது. இதன் விளைவு தான் நமக்கு தொடர் தும்பல், தலை பாரமாக இருப்பது, ஜலதோஷம், தலைவலி, முகத்தில் வீக்கம் போன்றவை ஏற்படுவது ஆகும். இவற்றில் இருந்து விடுபட நம் மருந்து மாத்திரை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. சித்த வைத்திய முறையை பின்பற்றினாலே போதும் இதிலிருந்து எளிதாக விடுபட்டு விடலாம்.
தேவையான பொருட்கள்:
சுக்கு
மிளகு
திப்பிலி
தாளிசபத்திரி
அதிமதுரம்
சித்தரத்தை
கருஞ்சீரகம்
ஓமம்
அக்ரகாரம்
மஞ்சள்
இவை அனைத்தையும் தனி தனியாக10 கிராம் என்ற சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
இதனை காலை மற்றும் இரவு என இரண்டு வேலையும் உணவு உண்பதற்கும் முன் இரண்டு கிராம் என்ற வீதத்தில் தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டு வர சைனஸ் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.