இதை செய்தால் போதும்.. குழந்தைகளுக்கு இனி சளி பிடிக்காது!! 100% இயற்கை தீர்வு!!
இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு சளி பிடிப்பது என்பது எளிதான ஒன்றாகி விட்டது.அதற்கு காரணம் காலநிலை மாற்றம்.குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டதால் அவற்றை குணப்படுவது என்பது பெரும் பாடு.நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் இருமல்,காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.இதற்கு எளிய தீர்வு இயற்கை முறை வைத்தியம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்தால் போதும் நாள்பட்ட நெஞ்சு சளி உடலை விட்டு உடனடியாக வெளியேறி விடும்.
>>தூதுவளை பயன்படுத்தி நெஞ்சு சளியை வெளியேற்றும் முறை:-
தேவையான பொருட்கள்:-
*தூதுவளை இலை – 3
* நெய் – 1/4 தேக்கரண்டி
செய்முறை:-
1.முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் 1/4 தேக்கரண்டி நெய் விட்டு சூடேறியதும் அதில் 3 தூதுவளை இலையை சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும்.பின்னர் இதனை சிறு உரலில் சேர்த்து இடித்து சாறு பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்.
2.பின்னர் குழந்தையின் நாவில் படும் படி அந்த சாற்றை விடவும்.இப்படி செய்தால் நெஞ்சு சளி பாதிப்பு குணமாகும்.
>>ஆடாதோடை இலையை பயன்படுத்தி நெஞ்சு சளியை வெளியேற்றும் முறை:-
தேவையான பொருட்கள்:-
*ஆடாதோடை – 1/2 இலை
* தேன் – 3 துளிகள்
செய்முறை:-
1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தி கொள்ளவும்.பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
2.அந்த வெதுவெதுப்பான தண்ணீரில் ஆடாதோடை இலை பாதி எடுத்து அலசி கொள்ளவும்.
3.பிறகு அவற்றை இடித்து சாறு எடுக்கவும்.
4.இந்த சாற்றில் 3 துளி தேன் சேர்த்து அவற்றை குழந்தைகளின் நாக்கில் படும்படி வைக்கவும்.இவ்வாறு ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை செய்தால் நெஞ்சு சளி மற்றும் வறட்டு இருமல் பாதிப்பு உடனடியாக நீங்கி விடும்.
>>தும்பைப்பூ பயன்படுத்தி நெஞ்சு சளியை வெளியேற்றும் முறை:-
தேவையான பொருட்கள்:-
*தும்பைப்பூ – 10
*தாளிசபத்திரி – 1/4 தேக்கரண்டி
*ஆடாதோடை இலை – 2
*தேன் – 3 துளிகள்
செய்முறை:-
1.ஒரு உரலில் தும்பைப்பூ, தாளிசபத்திரி, ஆடாதோடை இலை மூன்றையும் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து கொள்ளவும்.
2.பிறகு அதில் 3 துளிகள் தேன் சேர்த்து நன்கு குழைத்து அவற்றை குழந்தைகளின் நாக்கில் படும்படி வைக்கவும்.ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை வைத்து வந்தால் தீராத சளி,இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் விரைவில் குணமாகும்.