இதை மட்டும் செய்தால் போதும்!! கருப்பான உதடுகள் சிவப்பாகும்!!

0
211
#image_title

பெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் உதடுகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் ஒரு சில பெண்களுக்கு உதடுகள் கருப்பாக இருக்கும். என்னதான் நாம் லிப்ஸ்டிக் போட்டாலும் இயற்கையான சிவந்த நிறத்திற்கு ஈடாகாது.

உதடுகளில் உள்ள இறந்த செல்கள், சூரிய ஒளித்தாக்ககம், வைட்டமின் குறைபாடு, உதடுகளில் ஈரப்பதம் இல்லாமை போன்றவை உதடுகள் கருப்பாக காரணம். கருப்பான உதடுகளை சிவந்த நிறமாக மாற்றுவதற்கான வழிகளை பார்க்கலாம்.

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து கொள்ளலாம். இதில் ஒரு சிறிய காபித் தூள் பாக்கெட்டை போடவும். கடைகளில் விற்கும் 2 ரூபாய் காபித்தூள் ஒரு பாக்கெட் போடவும். எந்த காபித்தூள் வேண்டுமானாலும் போடலாம். பிறகு அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரையை பவுடர் செய்தும் சேர்க்கலாம்.

இந்த இரண்டு பொருட்களையும் கலந்து கொள்ள அரை மூடி எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதில் தண்ணீர் சேர்க்க கூடாது. இதை நன்றாக கலக்கவும். இதில் எலுமிச்சை சாறு கலப்பதால் எரிச்சல் ஏற்படும் என்ற சந்தேகம் வரலாம். இந்த பொருட்களுடன் எலுமிச்சை சாறு சேரும் போது எரிச்சல் ஏற்படாது. இதை மொத்தமாக தயாரித்து எடுத்து வைக்க கூடாது. ஒவ்வொரு முறையும் புதிதாக தயாரிக்க வேண்டும்.

நன்றாக கலந்த பிறகு கைகளால் சிறிது எடுத்து லிப்ஸ்டிக் போடுவது போல் உதட்டின் மேல் தடவவும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை செய்யவும். இதை உதட்டின் மேல் தடவி ஒரு 5 நிமிடத்திற்கு மிருதுவாக தேய்க்கவும். இப்படி செய்வதால் உதட்டில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி புதிய செல்கள் உருவாகும். ஒரு சிலருக்கு இருக்கும் ஈரப்பதம் இல்லாத உதடுகளுக்கு இந்த முறை எளிதில் பலன் கொடுக்கும்.

இதை செய்து முடித்து ஒரு டிஷ்யு பேப்பர் கொண்டு உதட்டை துடைத்து விடவும். இப்படி செய்வதால் உதட்டில் உள்ள கருமைகள் நீங்கி உதடுகள் சிவந்த நிறத்தை பெரும். இந்த செய்முறை விரைவான பலன் கொடுக்கும்.