ஆண் மற்றும் பெண்ணின் சருமத்தில் முடி வளர்வது இயற்கையான ஒன்று தான்.ஆண்களுக்கு முகத்தில் முடி வளர்வதால் அவர்களின் அழகு அதிகரிக்கிறது.அதுவே பெண்களுக்கு முகத்தில் முடி வளர்ந்தால் அது அவர்களின் அழகை கெடுத்துவிடுவதாக அமைகிறது.
பெண்கள் கன்னம்,நெற்றி,உதடுகளின் மேல் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றி பளபளப்பான சருமத்தை பெற விரும்புகின்றனர்.இதற்காக பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.சிலர் ஷேவிங் மெஷின் கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுகின்றனர்.
இது தற்காலிக தீர்வாக மட்டுமே உள்ளது.ஷேவிங் செய்தால் ஒரு வாரத்தில் மீண்டும் முடி முளைக்க தொடங்கிவிடும்.லேசர் சிகிச்சை,எபிலேட்டர் போன்றவற்றின் மூலம் முடிகளை அகற்றலாம்.அதேபோல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தும் தீர்வு காண முடியும்.
TIPS 01
1)மஞ்சள் தூள்
2)பப்பாளி
இந்த இரண்டு பொருட்களை கொண்டு தேவையற்ற முடிகளை அகற்றும் க்ரீம் தயாரித்துவிடலாம்.அதற்கு முதலில் நீங்கள் ஒரு கீற்று பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து க்ரீமி பதத்திற்கு அரைத்து முகத்தில் பூசி நன்கு காய வையுங்கள்.
பிறகு ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நினைத்து பிழிந்து முகத்தை துடைக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் தேவையற்ற முடிகள் நீங்கிவிடும்.
TIPS 02
1)எலுமிச்சை சாறு
2)சர்க்கரை
ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் உலர விடுங்கள்.பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் தேவையற்ற முடிகள் நீங்கிவிடும்.