இதை ஒரு நாள் செய்தால் போதும்! முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இந்த ஜென்மத்தில் ஏற்படாது!

0
308
#image_title

இதை ஒரு நாள் செய்தால் போதும்! முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இந்த ஜென்மத்தில் ஏற்படாது!

உங்களில் பலருக்கு மலம் கழிப்பதில் பல வித சிக்கல் ஏற்படும். அதிலும் மலம் இறுகி வறண்ட நிலையில் வெளியேறும் பொழுது ஆசனவாய் பகுதியில் வலி, வீக்கம் ஏற்படும். இதனால் தினமும் முக்கியபடி மலம் கழிக்கும் நிலை தொடரும். இதனால் மலச்சிக்கல் பாதிப்பு நாளடைவில் பைல்ஸாக மாறத் தொடங்கும்.

எனவே மலச்சிக்கல் ஏற்பட்டால் அதை விரைவில் குணமாக்கி கொள்ளுங்கள். இல்லையென்றால் பின்னாளில் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மலச்சிக்கலை போக்க உதவும் வீட்டு வைத்தியம்:-

*பப்பாளி
*பால்
*விளக்கெண்ணெய்

செய்முறை…

பப்பாளி குடலில் தேங்கி கிடக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இந்த பப்பாளியை தோல் நீக்கி கீற்று போட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து பால் சேர்த்து காய்ச்சவும். பால் நன்கு கொதிக்கும் பொழுது அரைத்த பப்பாளியை சேர்த்து 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இதை ஒரு கிளாஸுக்கு ஊற்றி சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து குடிக்கவும். இந்த பப்பாளி சேர்த்த பால் குடலில் தேங்கி கிடக்கும் மலக் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி குடலை சுத்தமாக்கும்.

இந்த பாலை மாதம் ஒருமுறை குடித்து வந்தால் வாழ்நாளில் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கு இடம் இருக்காது.