Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண் திருஷ்டி ஒழிய வீட்டிலேயே செய்யும் எளிய பரிகாரம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 

just-do-this-only-except-for-eye-strain

just-do-this-only-except-for-eye-strain

கண் திருஷ்டி ஒழிய வீட்டிலேயே செய்யும் எளிய பரிகாரம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

கண் திருஷ்டி ஏற்பட்டால் தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை உண்டாகும். ஒரு சிலர் தாங்கள் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைந்து விடுவார்கள். சிலர் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவர்கள் எட்ட வேண்டிய இலக்கை நோக்கி பயணிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். காரணம் இவர்களின் வளர்ச்சி மீது சிலருக்கு ஏற்படும் பொறாமை. அதுவே கண் திருஷ்டியாக மாறி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்களுக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்கும்.

இந்த கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை குளிக்கும் நீரில் கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பூஜை செய்யும் பொழுது தூபம் போடுவது வழக்கம்.அவ்வாறு சாம்பிராணி தூபம் போடும் பொழுது வெண்கடுகு சேர்த்து தூபம் போட்டால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகும்.

ஒரு எலுமிச்சையை இரு துண்டுகளாக நறுக்கி ஒரு பகுதிக்கு மஞ்சள் மற்றும் ஒரு பகுதிக்கு குங்குமம் வைத்து வீட்டு நிலை வாசலில் வைக்கவும்.இவ்வாறு செய்வதினால் கண் திருஷ்டி விலகும்.

Exit mobile version