நுரையீரலில் தேங்கி இருக்கும் மொத்த சளியும் வெளியேற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று நெஞ்சு சளி. இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும். இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதானல் நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை இயற்கை வழிகளை பின்பற்றி வெளியேற்றுவது சிறந்த தீர்வாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
*இலவங்கம் – 4
*பட்டை – 2
*ஏலக்காய் – 2
*டீ தூள் – 1 தேக்கரண்டி
*இஞ்சி – சிறு துண்டு
*கருப்பு மிளகு – 1/4 தேக்கரண்டி
*பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் இலவங்கம் , 2 பட்டை துண்டு, 1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு சேர்த்து கொள்ளவும்.
பின்னர் அதோடு 2 ஏலக்காய், சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் 1 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். தண்ணீர் சூடேறியதும் அதில் 1 தேக்கரண்டி டீ தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 2 டம்ளர் தண்ணீர் சுண்டி 1 டம்ளராக வரும் வரை கொதிக்க விடவும். பிறகு அடுப்பை அணைத்து ஒரு டம்ளரில் அதை வடிகட்டி கொண்டு பருகவும். இவ்வாறு செய்து பருகினால் நுரையீரலில் தேங்கி கிடந்த சளி முழுவதும் உடனடியாக வெளியேறி விடும்.