“சரக்கரை நோய் புண்” விரைவில் ஆற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஏற்பட கூடிய நோயாக சர்க்கரை பாதிப்பு இருக்கிறது.இந்த நோய் இருப்பவர்கள் உடலில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஒரு வேளை காயம் ஏற்பட்டால் அவை சரியாக வாய்ப்பு மிகவும் குறைவு.
இந்த சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு உண்டாகும் புண்களில் குழிப்புண் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும்.எனவே சர்க்கரை நோயாளிகள் உடலில் உள்ள புண்களை ஆற்ற இயற்கை வழிகளை முயற்ச்சித்து பாருங்கள்.நிச்சயம் பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
*மருதாணி இலை – 1 கப்
*மஞ்சள் – 1 தேக்கரண்டி
*தேங்காய் பால் – 1/4 டம்ளர்
*தயிர் – 3 தேக்கரண்டி
*குப்பைமேனி – 15
*கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் மருதாணி இலை 1 கப் அளவு எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.
அதேபோல் 15 குப்பைமேனி இலை எடுத்து தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.இதனை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
அடுத்து 2 அல்லது 3 துண்டு தேங்காய் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.இதனை நன்கு அரைத்து இதன் சாற்றை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.
பின்னர் கற்றாழை 1 துண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் அதில் உள்ள ஜெல்லை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் அலசி சுத்தம் செய்து வைத்துள்ள மருதாணி இலை 1 கப்,குப்பைமேனி இலை 15,மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி,அரைத்து வடிகட்டி வைத்துள்ள தேங்காய் பால் 3 தேக்கரண்டி,வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட தயிர் மற்றும் எடுத்து வைத்துள்ள ப்ரஸ் கற்றாழை ஜெல் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளளவும்.கொரகொரப்பாக இல்லாமல் பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.
பிறகு இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.சர்க்கரை நோயால் ஏற்பட்டுள்ள புண்கள் மீது இதை தடவி வருவதன் மூலம் விரைவில் அந்த பாதிப்பு நீங்கும்.
இந்த பொருட்களுடன் தாத்தா பூ என்று நாம் சொல்லும் செடியில் உள்ள இலைகளையும் சேர்த்து அரைத்து சர்க்கரை நோய் புண் மீது தடவி வந்தோம் என்றால் நல்ல பலன் கிடைக்கும்.