பாத்ரூமில் மஞ்சள், உப்பு கறை மற்றும் துர்நற்றம் நீங்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!
நம் வீட்டு சமையலறை மற்றும் பாத்ரூம் சுத்தமாக இருந்தால் தான் நம் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் பாத்ரூமில் உள்ள மஞ்சள், உப்பு கறை மற்றும் துர்நாற்றம் வீசினால் அவற்றை பயன்படுத்த சிரமமாக இருக்கும். இதை சுத்தம் செய்ய வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தினால் போதுமானது. இதனால் பாத்ரூம் சுத்தமாக இருப்பதோடு நிமிடத்தில் பளிச்சிடச் செய்யும்.
தேவையான பொருட்கள்:-
*எலுமிச்சை தோல் – 8
*வினிகர் – 1 தேக்கரண்டி
*சோடா உப்பு – 1 தேக்கரண்டி
*உப்பு – 1 தேக்கரண்டி
*சலவைத் தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை…
ஒரு மிக்ஸி ஜாரில் 8 எலுமிச்சை தோல் சேர்த்து தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.
அடுத்து அதில் 1 தேக்கரண்டி வினிகர், 1 தேக்கரண்டி சோடா உப்பு, 1 தேக்கரண்டி சலவைத் தூள் மற்றும் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
இதை பாத்ரூமில் கறை இருக்கும் இடத்தில் தெளித்து 15 நிமிடங்களுக்கு ஊறவிடவும். பின்னர் ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு அதை நன்கு தேய்த்து தண்ணீர் ஊற்றி அடித்து விடவும். இவ்வாறு செய்தால் பாத்ரூமில் படிந்து கிடக்கும் மஞ்சள் கறை, உப்பு கறை மற்றும் துர்நாற்றம் முழுவதும் நீங்கி பாத்ரூம் புதிது போன்று பளிச்சிடும்.