Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் செல்வம் நிலைத்து இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

#image_title

வீட்டில் செல்வம் நிலைத்து இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

1)வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகள் வீட்டிற்குள் வராது. வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

2)பூஜை அறையில் கடவுள் படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும்.

3)வாரத்திற்கு இருமுறையாவது வீடு மற்றும் பூஜை அறையை கழுவி சுத்தம் செய்யும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.

4)தினமும் எழுந்த உடன் முதலில் உங்கள் உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் முகம் அல்லது கடவுள் படங்களை பார்க்கவும்.

5)கடவுளுக்கு வாழை இலைகளில் தான் உணவு மற்றும் பழங்களை வைத்து படைக்க வேண்டும்.

6)பூஜை அறையில் வாசனை திரவியங்கள் வைப்பதன் மூலம் ஒரு தெய்வீக மணம் வீசுவதோடு நம் மனநிலையும் மகிழ்ச்சியாகும்.

7)தினந்தோறும் வீட்டில் காலை மாலை வேளைகளில் பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும்.
பூஜை அறையில் ஏற்றப்படும் தீபங்களை நாமாக அணைக்கக் கூடாது. அது தானாக முழுவதும் எரிந்து அணைதல் மிகவும் நல்லது.

8)தினமும் ஒரு ஐந்து நிமிடங்களாவது வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கடவுளை வணங்க வேண்டும்.

9)பூஜை அறையில் எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.சாமி படங்களிடம் உலர்ந்த பூக்களை விட்டு வைக்க கூடாது.

Exit mobile version