Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

#image_title

வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பது. இதை பலரும் செய்வதில்லை. அதேபோல் யோசிக்காமல் செல்வது செய்யும் பழக்கம் இருப்பதினால் தான் கையில் பணம் தங்காமல் சென்று விடுகிறது.

தொடரந்து வீண் செலவுகள் செய்து வந்தோம் என்றால் விரைவில் கடனாளிகளாக மாறிவிடுவோம் என்ற பயம் இருந்தால் மட்டுமே பணத்தை முறையாக சேமிக்க மற்றும் செலவழிக்கும் பழக்கம் ஏற்படும்.

இதற்கு சில ஆன்மீக வழிகளை பின்பற்றினோம் என்றால் விரைவில் நல்ல பலன் உண்டாகும்.

*வீட்டில் குபேர சிலை அல்லது புகைப்படம் வைத்து வழிபட்டால் பண கஷ்டம் நீங்கி செல்வம் நாளுக்கு நாள் பெருகும்.

*வீட்டு பூஜை அறையில் ஒரு உண்டியல் வைத்து தினமும் சில்லறை காசுகளை போட்டு வருவதால் சேமிக்கும் பழக்கம் உண்டாகும். தேவையற்ற செலவுகளை செய்ய மனம் விரும்பாது.

*ஒரு காட்டன் துணி எடுத்து அதில் மஞ்சள் சேர்க்க வேண்டும். பின்னர் பச்சை கற்பூரம் 3, இலவங்கம் 3, ஏலக்காய் 3 ஆகியவற்றை அந்த காட்டன் துணியில் சேர்த்து சிறு மூட்டை போல் கட்டி ஒரு நூல் கொண்டு கட்டி கொள்ள வேண்டும். பின்னர் நாம் பணம் வைக்கும் இடமான பணப் பெட்டி, அஞ்சறைப் பெட்டி, பீரோ உள்ளிட்ட இடங்களில் அதனை வைக்க வேண்டும்.

*ஊதியம் வாங்கிய உடன் அதில் 1 பங்கை எடுத்து ஒரு பெட்டி அல்லது உண்டியலில் போட்டு அதனுடன் ஏலக்காய், துளசி, பிரிஞ்சி இலை போன்ற வாசனை நிறைந்த பொருட்களை வைத்து எதற்காகவும் இந்த பணத்தை எடுக்க கூடாது என்று முடிவு செய்து சேர்க்க வேண்டும்.

*பணம் வைக்கும் இடத்தில் கல் உப்பு ஒரு துணியில் பொட்டணம் கட்டி வைப்பது மிகவும் நல்லது.

நாம் பயன்படுத்தும் வேலட்டில் ஏலக்காய்,துளச,பச்சை கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை வைப்பதினால் தேவையற்ற செலவுகள் குறையும்.

*சம்பளம் வாங்கியதும் முதலில் உப்பு கல்லில் ஒரு நாள் முழுவதும் வைத்துவிட்டு பின்னர் எடுக்கவும். இவ்வாறு செய்வதால் தேவையற்ற செல்வுகள் ஏற்படாது.

Exit mobile version