நாம் தினமும் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் அது நம்முடைய சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கி விடுகின்றது. இந்த சிறுநீரக கற்கள் நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே சிறுநீரக கற்கள் ஏற்பட்டால் அதற்கு உடனே தீர்வு காண வேண்டும்.
சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற தேவைப்படும் முக்கியமான உணவுப் பொருள் வாழைத் தண்டு ஆகும். வாழைத் தண்டை நாம் பொரியலாகவும் ஜூஸ்ஸாகவும் செய்து குடிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து வாழைத் தண்டை எதாவது ஒரு விதத்தில் நாம் எடுத்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறும்.
இந்த வாழைத் தண்டைப் போலவே சிறுநீரக பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்தும் முக்கியமான மூலிகை கீழாநெல்லி ஆகும். மஞ்சள் காமாலைக்கு சிறப்பான முக்கியமான மருந்தாக பயன்படுத்தப்படும் கீழாநெல்லியை நாம் எடுத்துக் கொண்டால் சிறுநீரக பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். இந்த கீழாநெல்லியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* கீழாநெல்லி
* தேன்
கீழாநெல்லி மற்றும் தேன் இந்த இரண்டு பொருட்கள் மட்டுமே நம்முடைய அனைத்து வகையான சிறுநீரக பிரச்சனைகளை குணப்படுத்தி விடும்.
செய்முறை:
முதலில் கீழாநெல்லியை எடுத்து அரைத்து அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கீழாநெல்லி சாற்றை ஒரு சிறிய டம்ளருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதை நன்கு கலந்து விட்டு குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் நமக்கு ஏற்படும் அனைத்து வகையான சிறுநீரக பிரச்சனைகளையும் எளிமையாக குணப்படுத்தி விடலாம்.