Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!!

#image_title

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!!

கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது.புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது,வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம்.காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான்.நம் குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

*எலுமிச்சை பழத்தை அறுத்து ஒரு பக்கத்தில் குங்குமம் மறுபக்கத்தில் மஞ்சள் தடவி தலை வாசலில் இரு பக்கமும் வைக்கலாம்.

*பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பு அறையில் வைக்கலாம்.

*மஞ்சளில் கிழங்கு மேல் சந்தனம் குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

*வாரம் இருமுறை சாம்பிராணி புகையை வீடு முழுவதும் காட்டலாம்.

*கண் திருஷ்டி கணபதி படத்தை வாசலில் வைக்கலாம்.

*நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும்,கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும்,கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பவுர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்க விடலாம்.

*ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து அதை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வீட்டு வாசல் முன் தொங்க விடவும்.எலுமிச்சம் பழத்தில் தீய சக்திகளை விரட்டியடிக்கும் தன்மை இருக்கிறது.

Exit mobile version