நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!

0
149
#image_title

நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!

சாதாரண சளி பாதிப்பு ஏற்பட்டாலே அவை குணமாக ஒரு வராம் ஆகும். நெஞ்சி சளி என்றால் சொல்ல தேவையில்லை. வற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும்.

நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:-

*அதிக சளி

*வறட்டு இருமல்

*தலைபாரம்

*நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல்

*அடர் மஞ்சள் நிற சளி

*சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல்

நெஞ்சு சளி நீங்க கஷாயம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*இஞ்சி

*மிளகு

*கொத்தமல்லி விதை

*திப்பிலி

*மஞ்சள்

செய்முறை:-

மேல குறிப்பிட்டுள்ள மிளகு, இஞ்சி, கொத்தமல்லி, திப்பிலி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்து ஒரு உரலில் தட்டி எடுக்கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இடித்து வைத்துள்ள மூலிகை பொருட்களை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பை அணைத்து காய்ச்சிய கஷாயத்தை ஒரு டம்ளரில் வடிகட்டி குடித்து வந்தால் கடுமையான நெஞ்சு சளி சில நாட்களில் குணமடையும்.