பேரிச்சம்பழம் தினமும் எடுத்துக் கொண்டால் நம் உடலுக்கு மிக நல்லது. ஏனென்றல் பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்து உள்ளதால் இது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் இன்னும் பலவகையான நன்மைகள் உள்ளன. பேரிச்சம் பழத்தில் கால்சியம் இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, ஆரோக்கியமான செரிமானம் மற்றும் மல சிக்கல்களை இது சரி செய்கிறது.
மேலும் கொழுப்பு அளவை பராமரிக்க உதவுகிறது. மிக முக்கியமானது இதய ஆரோக்கியத்திற்கு பேரிச்சம்பழம் சாப்பிடுவது மிக நல்லது. மேலும் இந்த பழத்தை குளிர் காலத்தில் சாப்பிடுவது மிக நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மிக முக்கியமாக சர்க்கரை நோய் இருப்பவர்கள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவர்களின் உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரித்து அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின் k முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் உடலில் உள்ள எலும்புகள் ஆரோக்கியமாக மற்றும் வலுவாக மாற பெரிதும் உதவுகிறது. மேலும் குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருக்கும். அப்போது பேரிச்சம் பழம் சாப்பிட்டால் அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தொற்று நோய்களை எதிர்த்து உடல் ஆரோக்கியம் மற்றும் ஆற்றலை மேம்படுத்துகிறது. ஒரே ஒரு பழத்தின் மூலம் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றன என்பதை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.