இதை மட்டும் தினமும் சாப்பிட்டு பாருங்க!..ஆரோக்கியத்தை திடப்படுத்தும் தூய்மையான பசு மாட்டு நெய்..
நெய் என்பது பண்டைய இந்தியாவில் தோன்றிய தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் வகையாகும். இது அமிர்தத்திற்கு இணையானது. தூய மாட்டு நெய் மிகவும் பொக்கிஷமான உணவுகளில் ஒன்றாகும்.பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சிறந்த தரமான மற்றும் தூய மாட்டு நெய்யை தினசரி உணவுடன் சேர்த்து உட்கொள்வதால் உடலுக்கு ஆற்றல் கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இது சுவையிலும், மணத்திலும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இதை தினமும் உங்கள் உணவுகளில் சேர்த்துக்கொள்ள உடலுக்கு குளிர்ச்சி தரும்.
நெய்யில் உடலுக்கு கேடுதரும் கெட்ட கொழுப்பு இருக்கிறது என்று நினைத்து நிறைய பேர் நிராகரிப்பதுண்டு. இது குறித்து சமீபத்திய ஆண்டுகளில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் டெல்லி கடந்த 2018ஆம் ஆண்டு கொலஸ்ட்ரால் கொண்ட உணவுகள் பற்றி கூடுதல் விழிப்புணர்வுக்கு நடத்தப்பட்ட சோதனையில் தூய பசு நெய்யில் உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் கொழுப்புகள் இல்லை எனவும் இதில் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் நெய் சாப்பிட்டால் உடல் உறுப்புகளை சுத்தப்படுத்தும். மலச்சிக்கலால் அவதிப்படுவர்கள் சுடுநீரில் அரை ஸ்பூன் தூய மாட்டு நெய் சேர்த்து கலந்து குடித்தால் மலச்சிக்கல் தீரும்.
மருத்துவரின் அறிவுறுத்துதல் பிறந்த குழந்தைக்கு 6 மாதங்களுக்குப் பிறகு அதன் ஒரு வயது வர கஞ்சி அல்லது பருப்பு சாதத்துடன் தினமும் 2 முதல் 3 டீஸ்பூன் வரை பசு நெய் சேர்த்து கொடுக்கலாம். ஒரு வயது முதல் ஐந்து வயது வரை தினமும் 4 டீஸ்பூன் பசு நெய் வரையிலும் 5 வயதுக்கு மேல் தினமும் 6 டீஸ்பூன் பசு நெய் வரையிலும் சாப்பிடலாம். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தினசரி 8 டீஸ்பூன் பசு நெய் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடன் அன்றைய நாளில் காணப்படுவார்கள்.