Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண் குறைபாடு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் இந்த 1 லட்டு போதும்!!

Just eat this laddu!! You will not get any disease!!

Just eat this laddu!! You will not get any disease!!

கண் குறைபாடு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் இந்த 1 லட்டு போதும்!!

இந்த ஒரு லட்டு மட்டும் போதும். நரைமுடி, முடி உதிர்தல், கண் பார்வையில் பிரச்சினை, சரும பிரச்சினை, வயதாவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கம் என அனைத்து பிரச்சினைகளையும் இந்த ஒரு லட்டு மட்டுமே சரி செய்யும். இந்த லட்டுவில் சேர்க்கும் பொருட்களின் சத்துக்கள் அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்க்கிறது. இந்த லட்டுவை எப்படி செய்வது, இதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ராகி மாவு 1 கப்

ஆளி விதை ½ கப்

கருப்பு எள் ½ கப்

பூசணி விதை ½ கப்

ஏலக்காய் 4 அல்லது 5

பேரீச்சம் பழம் 10 முதல் 20 சுவைக்கேற்ப

நெய் தேவையான அளவு

ராகி மாவில், ஜிங்க் (zinc), அயன் (Iron), மக்னீசியம் (Magnesium), காப்பர்( Copper )இது எல்லாமே நமது நறைமுடிகளை கருப்பாக்க உதவுகிறது. முடி வளர்ச்சிக்கு மற்றும் சரும பிரச்சினைகள் போக உதவுகிறது.

ஆளி விதை இதில் ஒமேகா 3 இருப்பதால் உறுதியான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

கருப்பு எள் இது மெலனினை உற்பத்தி செய்கிறது. இந்த மெலனின் நரை முடிகளை கருப்பாக்க உதவுகிறது.

பூசணி விதைகள் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

செய்முறை

முதலில் ராகி மாவை வறுத்து கொள்ளவும். அடுத்ததாக ஆளி விதையை நன்றாக வறுத்து, அரைத்துக் கொள்ளவும். கருப்பு எள்ளையும் வறுத்து அரைத்துக் கொள்ளவும், பூசணி விதைகளையும் வறுத்து பொடி செய்து கொண்டாலும் சரி, அப்படியே விதைகளை கலந்து கொண்டாலும் சரி. ஏலக்காயையும் பொடி செய்து கொள்ளவும்.

பேரீச்சம் பழத்தை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த விழுதுடன் ராகி மாவு, ஆளி விதை பொடி, கருப்பு எள், பூசணி விதைகள் மற்றும் ஏலக்காய், 2 ஸ்பூன் நெய் என அனைத்தையும் கலந்து, பிசைந்து கொள்ளவும். பிறகு நெய்யை வைத்து லட்டு போன்று உருண்டை பிடிக்கவும். இது சாப்பிடுவதற்க்கு சுவையாகவே இருக்கும். இதை தினமும் எடுத்து கொள்ளலாம். இதை சாப்பிடுவதால் மேற்கூறிய பிரச்சினைகள் சரியாகும்.

Exit mobile version