இதை 1 முறை சாப்பிட்டால் போதும் இனி ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை வரவே வராது!!

0
111
Just eat this once and you won't get irregular periods anymore!!

இன்றைய ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போகிறது.ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மாதவிடாய் சுழற்சி தள்ளி போனால் பிரச்சனை இல்லை.ஆனால் ஒவ்வொரு மாதமும் சீக்கிரமாகவோ அல்லது தாமதாகவோ மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் அதை முறைப்படுத்த கீழே கொடுப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றலாம்.

1)இலவங்கப்பட்டை
2)நாட்டு மாட்டு பால்

சிறிய அளவு பட்டையை பொடித்து காய்ச்சிய நாட்டு மாட்டு பாலில் கலந்து குடித்தால் மாதவிடாய் ஒழுங்குபடும்.

பட்டையில் இருக்கின்ற சத்துக்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை ஒழுங்குபடுத்த உதவுகிறது.பட்டை பொடியை வெது வெதுப்பான நீரில் கலந்தும் குடிக்கலாம்.

1)ஆலமர வேர்
2)தேன்

நாட்டு மருந்து கடையில் ஆலமர வேர் மற்றும் ஆலமர வேர் பொடி கிடைக்கும்.பொடியாக வாங்க விரும்பாதவர்கள் ஆலமர வேரை வாங்கி வந்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சுழற்சி முறையாக நடக்கும்.

1)கருப்பு எள்
2)தண்ணீர்
3)வெல்லம்

ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

அதன் பிறகு அரைத்த கருப்பு எள் பொடி மற்றும் மூன்று தேக்கரண்டி வெல்லத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வடிகட்டி குடித்தால் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி முறையாக நடக்கும்.

1)பப்பாளி பழம்

ஹார்மோன் குறைபாட்டை சரி செய்து மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த பப்பாளி பழம் பெரிதும் உதவுகிறது.இதை பொடியாக நறுக்கி ஜூஸ் அல்லது ஸ்மூத்தி செய்து குடிக்கலாம்.மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றை சரி செய்ய பப்பாளி பழம் சாப்பிடலாம்.

1)எலுமிச்சை சாறு
2)தேன்

ஒரு எலுமிச்சம் பழ சாறில் தேவையான அளவு நீர் சேர்த்து தேன் கலந்து குடித்து வர முறையற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

1)இஞ்சி
2)கருப்பட்டி

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு துண்டு இஞ்சையை இடித்து சேர்க்கவும்.அதன் பிறகு மூன்று தேக்கரண்டி கருப்பட்டி சேர்த்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் முறையற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.