Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜஸ்ட் நாலு மிளகு போதும்!! இரத்த கொதிப்பு பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் தானாகவே அடங்கிவிடும்!!

Blood Pressure: இரத்த கொதிப்பு பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை கொண்டு தீர்வு காணலாம்.

மிளகு கசாயம்

தேவையான பொருட்கள்:

*கருப்பு மிளகு – நான்கு
*தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:

நீங்கள் நான்கு கருப்பு மிளகை எடுத்து லேசாக வறுத்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து தூள் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு இடித்து வைத்துள்ள கருப்பு மிளகுத் தூளை அதில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இரத்த கொதிப்பு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

பச்சை பயறு கசாயம்

தேவையான பொருட்கள்:

*பச்சை பயறு – இரண்டு தேக்கரண்டி
*சீரகம் – அரை தேக்கரண்டி
*மிளகு – பத்து

செய்முறை விளக்கம்:

முதலில் 20 கிராம் அளவிற்கு பச்சை பயறை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து கால் தேக்கரண்டி சீரகம் மற்றும் பத்து மிளகை உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு பச்சை பயறு மாவு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

பிறகு இடித்து வைத்துள்ள சீரகம் மற்றும் மிளகுத் தூளை அதில் கொட்டி குறைவான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.இந்த கசாயத்தை அடிக்கடி செய்து குடித்து வந்தால் இரத்த கொதிப்பு பாதிப்பு குணமாகும்.

நெல்லிக்காய் வற்றல் தேநீர்

தேவையான பொருட்கள்:

*நெல்லிகாய் வற்றல் – நான்கு
*தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

முதலில் நெல்லிக்காயை நறுக்கி வெயிலில் காயவைத்து வற்றல் பக்குவத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

அதன் பிறகு நெல்லிக்காய் வற்றலை அதில் போட்டு கொதிக்க வைத்து கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி பருகி வந்தால் இரத்த கொதிப்பு குணமாகும்.அதேபோல் வெங்காயத் தேநீர் செய்து பருகி வந்தால் இரத்த கொதிப்பு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

Exit mobile version