Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரேஷன் கார்டு இருந்தால் மட்டும் போதும்! அத்தியாவசிய பொருட்களை எந்த நியாயவிலை கடைகளிலும் பெற்று கொள்ளலாம் நாளை முதல் அமல்!

Just having a ration card is enough! Essential items can be obtained from any reasonable price shops Effective from tomorrow!

Just having a ration card is enough! Essential items can be obtained from any reasonable price shops Effective from tomorrow!

ரேஷன் கார்டு இருந்தால் மட்டும் போதும்! அத்தியாவசிய பொருட்களை எந்த நியாயவிலை கடைகளிலும் பெற்று கொள்ளலாம் நாளை முதல் அமல்!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதம் தோறும் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ஐந்து கிலோ அரசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது.

மேலும் தமிழர்களுகே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம் தான்.அந்த வகையில் நடப்பாண்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடும் விதமாக மக்களுக்கு ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது.

இந்த பரிசு தொகுப்பானது கடந்த ஜனவரி 13 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பணியானது முடிவடைந்தது.அதனால் நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்கள் அத்யாவசிய உணவுப் பொருட்களை மக்கள் எந்த ரேஷன் கடைகளிலும் பெற்று கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

தற்போது வரை ரேஷன் பொருட்களை ரேஷன் அட்டையில் உள்ள முகவரியில் மட்டுமே பெற முடியும் என்ற சூழல் நிலவி வருகின்றது அதனால் இடம்பெயரும் தொழிலாளர்கள் அதிக அளவு  சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.அதனால் நாம் எந்த இடத்தில் இறுகின்றமோ அங்கு செயல்படும் ரேஷன் கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற வசதி தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்ததால் ரேஷன் அட்டையில் உள்ள முகவரிக்கு ஒதுக்கிய கடைகளில் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்தது. அதனால் நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ளது.அந்த பொருட்களை ரேஷன் அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version