மோரில் கலந்து குடித்தால் மட்டும் போதும்! தொப்பை உடல் எடை உஷ்ணம் அசுர வேகத்தில் குறையும்!!

0
221
#image_title

மோரில் கலந்து குடித்தால் மட்டும் போதும்! தொப்பை உடல் எடை உஷ்ணம் அசுர வேகத்தில் குறையும்!! 

வெயில் காலத்தில் மோரினை இப்படி குடித்தால் கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம், குறைப்பது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். அதற்கு மோரில் என்ன கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி பார்ப்போம்.

** சீரகம், மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தலா கால் டீஸ்பூன் அளவு எடுத்து கல்லில் நன்கு பொடித்துக் கொள்ளவும்.

** ஒரு ஆர்க்கு கறிவேப்பிலை மற்றும் ஒரு சிறிய துண்டு இஞ்சியையும் இடித்துக் கொள்ளவும்.

** ஒரு டம்ளரில் மோரினை எடுத்துக்கொண்டு அதில் இடித்து வைத்த மிளகு, வெந்தய கலவை மற்றும் இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

** அடுத்ததாக இதில் சுவைக்கு உப்பு சேர்க்கவும். பின்னர் சிறிது பெருங்காயம்,  மற்றும் மாங்காய் இருந்தால் சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும்.

** அதன் பின்னர் சிறிது கொத்தமல்லி தழையை நறுக்கி அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த மோரினை காலை வேளையிலோ, அல்லது மதிய வேளையிலோ உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ,  அல்லது உணவு உண்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்தோ எடுத்துக் கொள்ளலாம்.

இது உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் வெயில் காலத்தில் வரும் வயிற்றுப்புண், உடல் உஷ்ணம், வயிற்று எரிச்சல், வாயு தொல்லையை போக்கும். மூலத்தை கட்டுப்படுத்தும்.