Just Now: 400 படங்களில் நடித்த ஹீரோயின் அரசு மருத்துவமனையில் அனுமதி!!

0
227
Just Now: Heroine who acted in 400 films admitted to Govt Hospital!!

1966 ம் ஆண்டு வெளியான “நாடோடி” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெயகுமாரி.  இவர் 400 க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவரின் நிலை இன்னது என அறியாவண்ணம் உள்ளது.

நடிகை ஜெயகுமாரி, இவர் அக்காலத்திலேயே பல ஆயிரம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர். மேலும் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் தொடர்ச்சியாக, நாடோடி, சக்கரம், சத்தியம் தவறாதே, எங்கிருந்தோ வந்தாள், மாணவன், தபால்காரன் தங்கை, கெட்டிக்காரன், ரிக்ஷாகாரன் என பல படங்களில் நடித்துள்ளார்.

1952 ல் பிறந்த நடிகை ஜெயக்குமாரி கலை மீது கொண்ட ஆர்வத்தால் தனது சிறு வயதில் இருந்தே பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சிங்கப்பூர் சென்றபோது, அப்துல்லா என்பவரை காதலித்து மணமுடித்துக் கொண்டார். திருமணம் நடந்த பின்னும் இவர் சினிமா துறையில் பல படங்களில் நடித்தும் வந்துள்ளார்.

 நடிகை ஜெயக்குமாரியின் தவறான முடிவு :-

இவர் பல படங்கள் நடித்த பின் தானொரு தயாரிப்பாளராக மாற வேண்டும் என எண்ணினார். இதன் காரணமாக ஒரு படத்தினை தயாரிக்க முடிவெடுத்து தான் சம்பாதித்த மொத்த பணத்திணையும் அப்படத்தில் செலவிட்டார். எனினும் அப்படத்தினை முழுமையாக தயாரிக்க முடியவில்லை. தன்னிடம் உள்ள சொத்துக்கள் மொத்தத்தையும் விற்றும், கடன் வாங்கியும் அப்படத்தின் தயாரிப்பினை முடிக்க எண்ணினார். அதன் பலனாக அவர் சிறை சென்றது மட்டுமே முடிவாக இருந்தது.

தற்பொழுது, நடிகை ஜெயக்குமாரி தனது உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இவரை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், இவருக்கு மேல் சிகிச்சைக்கான உதவிகளை செய்து தருவதாக கூறியுள்ளார்.