உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனையை சந்தித்து வந்தீர்கள் என்றால் அது நாளடைவில் நரம்பு தளர்ச்சி பாதிப்பாக மாறிவிடும்.அதேபோல் மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இந்த பாதிப்பை சிகிச்சை இன்றி இயற்கையான முறையில் குணப்படுத்தலாம்.
நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்:
*அதீத தலைவலி
*மன அழுத்தம்
*உடல் நடுக்கம்
*இதய துடிப்பு அதிகரித்தல்
*அதிகளவு வியர்த்தல்
*தசை வலி
*மூச்சி விடுவதில் சிரமம்
நரம்பு தளர்ச்சிக்கான காரணங்கள்:
*நரம்பு சேதம்
*கடும் மன அழுத்தம்
*நரம்பு செல்கள் பாதிப்பு
தேவையான பொருட்கள்:-
1)வாழைப்பழம் – ஒன்று
2)பேரிச்சம் பழம் – இரண்டு
3)பாதாம் பருப்பு – நான்கு
4)பசும் பால் – ஒரு கப்
பயன்படுத்தும் முறை:-
ஒரு கனிந்த வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு பேரிச்சம் பழத்தை தோல் விதை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து நான்கு பாதாம் பருப்பை பீலர் கொண்டு சீவி வைத்துக் கொள்ள வேண்டும்.இதன் பிறகு பாத்திரத்தில் ஒரு கப் பசும் பால் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும்.
பால் ஒரு கொதி வரும் சமயத்தில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் துண்டுகளை போட்டு கரண்டி கொண்டு கலந்துவிட வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள பேரிச்சம் பழத் துண்டுகளை அதில் போட்டு கலக்க வேண்டும்.அடுத்ததாக சீவி வைத்துள்ள பாதாம் பருப்பை பாலில் போட்டு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பால் நன்றாக கொதித்து கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பின்னர் இந்த பாலில் தேவையான அளவு தேன் சேர்த்து மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த பாலை தொடர்ந்து பருகி வந்தால் நரம்பு தளர்ச்சி பாதிப்பில் இருந்து மீண்டு விடலாம்.நரம்பு தளர்ச்சி பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.தினமும் 20 நிமிடங்கள் தியானம்,யோகா செய்து வந்தால் மன அழுத்தம் நீங்கும்.மது பழக்கம் இருந்தால் அதை இன்றே விட்டுவிடுங்கள்.நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் காஃபின் நிறைந்த பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும்.