வெற்றிலை ஒன்று போதும் காது வலி இரைச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்!!

0
193
Just one betel nut is enough to get instant relief from tinnitus in the ears!!

நமது உடலில் காதுகள் முக்கிய உறுப்பாகும்.காதுகளை சுத்தமாக வைத்துக் கொண்டால் மட்டுமே கேட்கும் திறன் மேம்படும்.ஆனால் காது தொடர்பான பிரச்சனை,அதிக சத்தம் உள்ளிட்ட காரணங்களால் காது வலி,காது இரைச்சல்,காதுகளில் சீழ் வடிதல்,காது வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.

காது வலியை குணமாக்க கீழ்கண்ட இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தீர்வு 01:

துளசி இலை

சிறிதளவு துளசி இலையை அரைத்து சாறு எடுத்து காதுகளில் விட்டு வந்தால் காது வலி,இரைச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.

தீர்வு 02:

வெற்றிலை

ஒரு காம்பு நீக்கிய வெற்றிலையை சுத்தமான உரலில் போட்டு இடித்து சாறு எடுத்து காது ஓட்டையில் விட்டால் வலி,இரைச்சல் சரியாகும்.

தீர்வு 03:

பெருங்காயம்
தேங்காய் எண்ணெய்
நல்லெண்ணெய்

10 மில்லி தேங்காய் எண்ணெய்,10 மில்லி நல்லெண்ணெயில் சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து காய்ச்சி ஆறவிட்டு காதுகளுக்கு விடுவதால் காது வலி நீங்கும்.

தீர்வு 04:

பூண்டு

இரண்டு நாட்டு பூண்டை தட்டி நல்லெண்ணெயில் காய்ச்சி ஆறவிடவும்.பிறகு இதை வடிகட்டி காதுகளில் இரண்டு சொட்டு அளவு விடுவதால் காது இரைச்சல்,வலிக்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 05:

மல்லிகை எண்ணெய்

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் மல்லிகை எண்ணெய் வாங்கிக் கொள்ளவும்.இதில் மூன்று சொட்டு அளவு காதுகளில் விட்டு வந்தால் வலி,வீக்கம்,இரைச்சல் சரியாகும்.

தீர்வு 06:

கடுகு எண்ணெய்

பூண்டு பற்கள்

இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெயில் ஒரு பல் பூண்டை தட்டி சேர்த்து காய்ச்சவும்.இதை ஆறவிட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.இந்த எண்ணெயை காதிற்குள் விட்டால் வலி,எரிச்சல்,வீக்கம் குணமாகும்.

தீர்வு 07:

கிராம்பு

நல்லெண்ணெய்

இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெயில் இரண்டு கிராம்பு சேர்த்து காய்ச்சவும்.இதை ஆறவிட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.இந்த எண்ணெயை காதிற்குள் விட்டால் வலி,எரிச்சல்,வீக்கம் குணமாகும்.