இதில் ஒரு சங்கு மட்டும் போதும்!! குழந்தைகளுக்கு உடனடியாக நன்றாக பசியை தூண்டும் அருமையான டிப்ஸ்!!
எப்போதுமே பெற்றோர்களுக்கு கூடிய மிகப்பெரிய பிரச்சனை குழந்தையின் பசியை கண்டுபிடிப்பது. மேலும் இந்த பிரச்சனை மிகப்பெரிய சவாலாக உள்ளது. அவர்களுக்கு எப்போது பசி எடுக்கும், எந்த நேரத்தில் நல்ல சாப்பிடுவார்கள் என்பதை எளிமையாக தெரிந்து கொள்ள முடியாது. பசி இல்லாத சமயங்களில் குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருப்பது தாய்மார்களுக்கு மிகவும் கவலை தரும். சில குழந்தைகளுக்கு பசி எடுக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கவே ரொம்ப சிரமமாக இருக்கும். குழந்தைகள் உணவை தவிர்ப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அதற்கு மூலம் அவர்களுக்கு பசியின்மையாக இருக்கலாம். அதற்குக் காரணம் Junk food என்று சொல்லப்படும் உணவுகளை எண்ணெய் பலகாரங்கள், ஒரே வேளையில் அதிக உணவு எடுத்துக் கொள்வது.
இடைவெளி நேரத்தில் பழங்கள், காய்கள், சூப் கொடுக்கலாம். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குழந்தைகளின் பசியை தூண்டுவதற்கு ஒரு சிறந்த மருந்து செய்து அவர்களுக்கு கொடுக்கலாம்.
தேவைப்படும் பொருள்கள் சீரகம்
5 மிளகு
1 பல் பூண்டு
இஞ்சி சிறிதளவு
ஓமம்
தேன்
செய்முறை
முதலில் சீரகம் மிளகு பூண்டு இஞ்சி ஓமம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அரைத்தோ அல்லது இடித்தோ எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதனை கொதிக்க வைக்க வேண்டும். அதனை தொடர்ந்து தண்ணீர் கொதித்தவுடன் அரைத்து வைத்த அனைத்தையும் சேர்த்து ஒரு சங்கு வரும் அளவில் கொதிக்க வைக்க வேண்டும். அதன்பின் நன்றாக கொதித்த பின்னர் அதனை ஆற வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். ஆற வைத்த பின்னர் அதனுடன் அரை ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனை தினம் முன் காலை வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ஆறு மாத குழந்தை என்றால் அரை சங்கு மட்டும் கொடுக்க வேண்டும். ஒரு வருட குழந்தை என்றால் ஒரு சங்கு கொடுக்கலாம். இதனை கொடுத்தவுடன் தூங்க வைப்பதோ ஒரு இடத்தில் உட்கார வைக்க கூடாது. இதனை குடித்தவுடன் நன்றாக விளையாட வேண்டும். இதனை குடிப்பதால் குழந்தைகளுக்கு பசியை தூண்டுகிறது.