Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே ஒரு ட்ரிங்க்! மாதவிடாயின் மொத்த வலிகளுக்கும் பாய் பாய்!

ஒரே ஒரு ட்ரிங்க்! மாதவிடாயின் மொத்த வலிகளுக்கும் பாய் பாய்!

வயதுக்கு வந்த பெண்கள் மாதந்தோறும் மாதவிடாயை சந்தித்து தான் ஆக வேண்டும். இந்த நேரத்தில் பெண்ணின் உடல் பல வகைகளில் மாற்றம் அடையும். ஹார்மோன்கள் சுரப்பதால் நூற்றில் 75% பெண்கள் கோபத்துடனும் எரிச்சலுடனும் காணப்படுவர்.

இதை ஆராய்ச்சியிலும் அதிகாரப்பூர்வமாகவே கூறியுள்ளனர். இன்னும் பல பெண்களுக்கு அந்த மாதவிடாய் வலியை தாங்கிக் கொள்ள முடியாது. தற்சமயத்தில் ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி கால் வலி என அனைத்திற்கும் மாத்திரை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அதற்கு பதிலாக நாம் வீட்டிலேயே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஒரு ட்ரிங்க் செய்யலாம். இந்த ஒரு ட்ரிங்க் தான் அனைத்து வலிகளுக்கும் தீர்வு. சிறிதளவு துருவிய கேரட், மிளகுத்தூள், தண்ணீர், வெந்தயம் இதுவே அது செய்வதற்கு தேவையான பொருட்கள்.

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி சூடு படுத்திக் கொள்ள வேண்டும். அந்தத் தண்ணீரில் துருவிய கேரட், சிறிதளவு மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை போட வேண்டும்.

அதனை நன்றாக கொதிக்க விட வேண்டும். அவ்வளவுதான் சிறிது நேரத்திலேயே முழு வலியை நீக்கும் அருமையான பானம் ரெடியாகிவிட்டது.

Exit mobile version