இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை செய்து பருகவும்.
1)இலவங்கப்பட்டை நீர்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு துண்டு பட்டை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இந்த பானத்தை எடுத்துக் கொண்டால் சுகர் லெவல் ஈஸியாக கட்டுப்படும்.
2)மஞ்சள் பால்
பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பால் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
3)பாதாம் பால்
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைய பாதாம் பருப்பு பெரிதும் உதவுகிறது.அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி சூடு படுத்தவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பாதாம் பருப்பு பொடி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரை அளவு கட்டுப்படும்.
4)ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு கிளாஸ் நீரை பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு மாற்றி ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
5)புதினா தேநீர்
பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஐந்து புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.