இந்த எண்ணெய் ஒரு சொட்டு வைத்தால் தாய்ப்பால் கட்டுதலுக்கு நிமிடத்தில் ரிலீஃப் கிடைத்துவிடும்!!

0
150
Just one drop of this oil will give you instant relief from breastfeeding!!

இந்த எண்ணெய் ஒரு சொட்டு வைத்தால் தாய்ப்பால் கட்டுதலுக்கு நிமிடத்தில் ரிலீஃப் கிடைத்துவிடும்!!

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியம்.தாய்மார்கள் இரு மார்பு பகுதிகளிலும் மாற்றி மாற்றி பால் கொடுப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.தாய்ப்பால் கொடுப்பதில் தாமதமானால் பால் கட்டிக்கொண்டு வலி ஏற்படுத்தும்.இது அனைத்து தாய்மார்களும் சந்திக்க கூடிய இயல்பான ஒன்று தான்.

மார்பு பகுதியில் பால் கட்டிக்கொண்டால் அந்த இடத்தில் வலி,வீக்கம் ஏற்படும்.எனவே வலி,வீக்கத்தை குறைத்து கட்டிய தாய்ப்பாலை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வைத்திய முறைகளை தொடர்ந்து செய்து வரவும்.

1)தேங்காய் எண்ணெய்

தாய்ப்பால் கட்டிய இடத்தில் தேங்காய் எண்ணெய் அப்ளை அப்ளை செய்தால் சில நிமிடங்களில் கட்டிய தாய்ப்பால் வெளியேறிவிடும்.

2)உருளைக்கிழங்கு

ஒரு உருளைக்கிழங்கை வட்ட வடிவில் நறுக்கி மார்பு பகுதியில் வைக்கவும்.பிறகு ஒரு காட்டன் துணி எடுத்து மார்பு பகுதியை இருக கட்டி கொள்ளவும்.கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை இவ்வாறு செய்தால் தாய்ப்பால் கட்டல் பிரச்சனை நீங்கும்.

3)வெந்நீர் ஒத்தடம்

ஒரு கப் அளவு நீரை சூடு பொறுக்கும் அளவிற்கு கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு காட்டன் துணியை சூடான நீரில் போட்டு மார்பு பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் கட்டிய தாய்ப்பால் வெளியேறிவிடும்.

4)கற்றாழை நீர்

200 மில்லி தண்ணீரில் 2 அல்லது 3 துண்டு கற்றாழை சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு ஒரு துணியை அந்த நீரில் நினைத்து தாய்ப்பால் கட்டிய இடத்தில் லேசாக அழுத்தம் கொடுத்து வெளியேற்றவும்.

5)முட்டைகோஸ்

இரண்டு முட்டைகோஸ் இலை எடுத்து சூடாக்கி மார்பு பகுதியில் வைத்தால் சிறிது நேரத்தில் தாய்ப்பால் கட்டல் பிரச்சனை சரியாகும்.

6)பூண்டு + தேன்

இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி தேனியில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் கட்டல் பிரச்சனை ஏற்படாது.