Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெறும் ரூ.436 செலுத்தினால் ரூ.2,00,000 லட்சம் வரை கிடைக்கும்!! மிஸ் பண்ணிடாதீங்க!! 

Just pay Rs.436 and get up to Rs.2,00,000 Lakh!! Don't miss it!!

Just pay Rs.436 and get up to Rs.2,00,000 Lakh!! Don't miss it!!

வெறும் ரூ.436 செலுத்தினால் ரூ.2,00,000 லட்சம் வரை கிடைக்கும்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

நாட்டு மக்களின் நலனிற்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கி குடும்பங்களின் நலனிற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் “பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா”.

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் காப்பீடு பெற வேண்டுமென்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டமாகும்.காப்பீடு பெற்றவர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் அவரின் குடும்ப உறுப்பினருக்கு இழப்பீட்டு தொகை நேரடி வங்கி கணக்கு வாயிலாக வழங்கப்படுகிறது.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா(Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana)

இந்த திட்டத்தில் காப்பீடு பெற்றவர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அவரின் குடும்பத்தாருக்கு ரூ.2,00,000 வரை இழப்பீடு வழங்கப்படும்.இந்த திட்டத்தில் பயன்பெற பாலிசிதாரர்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் வங்கியில் வருடத்திற்க்கு ரூ.436 பிரீமியம் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டின் மே 31 ஆம் தேதிக்குள் வருடத்திற்கான பிரீமியம் தொகை ரூ.436 செலுத்த வேண்டும்.இதன் மூலம் ஜூன் 01 முதல் மே 31 வரை காப்பீட்டு பலனை பெற முடியும்.இதனால் ஒவ்வொரு வருடமும் காப்பீட்டை புதுப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் காப்பீடு பெற வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.அதன்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் காப்பீடு பெற முடியும்.ஒருவேளை நீங்கள் காப்பீடு பெற்ற வங்கி மூடப்பட்டு விட்டால் உங்கள் காப்பீடு காலாவதியாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதேபோல் பிரீமியம் வசூலிக்கப்பட உள்ள மே 25-மே 31 தேதிகளில் உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லையென்றால் உங்களுக்கான காப்பீடு காலாவதியாகி விடும்.இந்த திட்டத்தில் இணைய மருத்துவ பரிசோதனை எதுவும் தேவையில்லை.இந்த திட்டத்தில் தனி நபர் ஒருவர் ஒரு பாலிசி மட்டுமே எடுக்க முடியும்.

தேவைப்படும் ஆவணங்கள்:-

1)வங்கி கணக்கு எண்

2) ஆதார் அட்டை

பாலிசிதாரர்கள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.இந்த திட்டத்தில் பாலிசி எடுத்தவர் திடீரென இறந்துவிட்டால் காப்பீடு க்ளைம் செய்ய அவர் குறிப்பிட்டிருக்கும் நாமினி வங்கிக்குச் சென்று பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழ்,மருத்துவமனை ரசீது,கேன்சல் செய்யப்பட்ட செக் லீப்,நாமினியின் வங்கிக் கணக்கு ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.பின்னர் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆவணங்களை சரிபார்த்து காப்பீட்டு 30 நாட்களுக்குள் தங்கள் வங்கி கணக்கிற்கு செலுத்திவிடும்.

Exit mobile version