Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதனை வாயில் போட்டாலே போதும் அல்சர் நோயிலிருந்து 100 சதவீதம் விடுபடலாம்!!

#image_title

இதனை வாயில் போட்டாலே போதும் அல்சர் நோயிலிருந்து 100 சதவீதம் விடுபடலாம்!!

அல்சர் என்று அழைக்கப்படும் குடல் புண்கள் இருப்பவர்கள் தினமும் வயிற்று எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவீர்கள். மேலும் நாவறட்சி, வாய்ப்புண் போன்ற பிரச்சனைகளும் வரும். இந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

 

நாவறட்சி, வாய்ப்புண், வயிற்று புண் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த அதிமதுரம் மட்டும் போதும். இந்த அதிமதுரத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

 

* இந்த அதிமதுரத்தை எடுத்து தண்ணீரில் ஒரு அலசு அலசி அதை வாயில் வைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் இருக்கும் இனிப்பு சுவை கொஞ்சம் கொஞ்சமாக வாய் முழுவதும் பரவும். மேலும் தொண்டை வரை இறங்கும். பிறகு உமிழ் சுரக்கும். இதனால் வாய்ப்புண், நாவறட்சி ஆகியவை குணமடைகின்றது.

 

* ஒரு சிலருக்கு காரம் சார்ந்த உணவுகள் சாப்பிட்டு முடித்த உடனே வயிற்று வலி ஏற்படும். இது அல்சர் நோய் ஏற்படுவதற்கான அறிகுறி. அவ்வாறு வயிற்று வலி உள்ளவர்கள் நாட்டு மருந்து கடைகளில் விற்கும் அதிமதுர பொடியை வாங்கி வந்து ஒரு நாளுக்கு முன்னரே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு மறுநாள் காலையில் இதை வடிகட்டி குடிக்கவும். இதைப் போல தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வந்தால் வயிற்று வலி, வயிற்றுப் புண் எல்லாம் குணமாகும்.

Exit mobile version