Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு ஹாய் சொன்னால் போதும்! எல் ஐ சி பற்றிய உங்களின் அப்டேட்டுகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்! 

ஒரு ஹாய் சொன்னால் போதும்! எல் ஐ சி பற்றிய உங்களின் அப்டேட்டுகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்!

தற்போது அனைத்துமே டிஜிட்டல் முறையில் மாறி வருவதினால் மக்கள் வீட்டிலிருந்தபடியே அனைத்து சேவையும் பெற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில் வாட்ஸ் அப்பில் புதுப்புது அப்டேட்டுகள் வந்த வண்ணமே உள்ளது. அதனால்எல்ஐசி நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் இனி வாட்ஸ் அப் மூலமாக எல்ஐசி பாலிசிதாரர்கள் தகவல்களை கொடுக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. எல் ஐ சி நிறுவனம் மூலம் வாட்ஸப் செயலியை பயன்படுத்தி தங்களது பாலிசி தொடர்பான அனைத்து தகவலையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சேவையை பெறுவதற்கு எல் ஐ சி யின் 8976862090 என்ற எண்ணுக்கு எல் ஐ சி பாலிசிதாரர்கள் ஹாய் என்று குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும். அந்த குறுஞ்செய்திக்கு பதில் அளிக்கும் வகையில் வரும் பட்டியலில் இருந்து ப்ரீமியம், போனஸ், பாலிசி நிலவரம், கடன், வட்டி போன்றவற்றிலிருந்து ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அது தொடர்பான விவரங்களை பாலிசிதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் எல் ஐ சி யின் வலைதளத்தில் தங்களுடைய பாலிசிகளை பதிவு செய்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version