Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாசலில் இந்த இரண்டு பொருளை தூவினால் பணம் தானாக வரும்! ஆன்மீக உண்மை!!

வாசலில் இந்த இரண்டு பொருளை தூவினால் பணம் தானாக வரும்! ஆன்மீக உண்மை!!

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம் வீட்டில் நிற்பது பலருக்கும் கடினமான ஒன்றாக இருக்கும். அப்படி இல்லை என்றால் பல இடங்களிலும் கொடுத்த பணமும் திரும்ப கிடைக்காமல் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் நிலை வாசலில் இந்த இரண்டு பொருளை தூங்கினால் போதும் பணம் தானாக வந்து சேரும். இதனை செய்வதற்கென்றே தனிப்பட்ட நாள் மற்றும் கிழமை நேரம் என உள்ளது. அந்த நாட்களில் மட்டும் தான் இதனை செய்ய வேண்டும். இதனை வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் செய்ய வேண்டும். குறிப்பாக பௌர்ணமி வெள்ளிக்கிழமை நாளில் வந்தால் மிகவும் சிறப்பு. அன்று இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நான்கு முதல் ஐந்து ஏலக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணி நேரத்திலேயே எடுத்து வைத்த ஏலக்காயை பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்பு அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக லவங்கப்பட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இந்த இரண்டு பொடிகளையும் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணி நேரத்தில் நிலை வாசலில் போட வேண்டும். குறிப்பாக நிலை வாசலில் முன் நின்று வீட்டை நோக்கி இந்த பொடியை ஊதிவிட வேண்டும். அவ்வாறு ஊதும் பொழுது அப்படி நிலை வாசலிலும் பட வேண்டும் வீட்டினுள் போகுமாறும் இருக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பணம் தானாகவே வீட்டிற்கு வந்து சேரும்.

Exit mobile version