Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினமும் காலையில் இது மட்டும்தான்!! இந்த ஒரு பழத்தில் இவ்வளவு நன்மைகள் சூப்பர் டிப்ஸ்!! 

தினமும் காலையில் இது மட்டும்தான்!! இந்த ஒரு பழத்தில் இவ்வளவு நன்மைகள் சூப்பர் டிப்ஸ்!!

எலுமிச்சை பழம் அன்றாட வாழ்வில் தினமும் ஏதோ ஒரு உணவில் சேர்த்து உண்டு வருகிறோம். தினமும் உண்பதால் ஏற்படும்  நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரிவதில்லை. இந்த எலுமிச்சை பழத்தின் தாயகம் ஆசியா என்று சொல்லப்படுகிறது. சிறிய செடி வகைத் தாவரமாக எலுமிச்சை அறியப்படுகிறது.

எலுமிச்சை பல மருத்துவ குணம் கொண்டது. எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்ப சர்க்கரை அல்லது உப்புடன் சேர்த்துப் பருகுவது ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. சமையலில், உணவுகளுக்கு சுவை கூட்டுவதற்கு பயன்படுகிறது.

மேலும் எலுமிச்சை பழம் நீள்வட்ட மஞ்சள் பழமானது. இது உலகம் முழுவதிலும் சமையல் மற்றும் சமையல் அல்லாத நோக்கத்திற்கும் பயன்படுகிறது. எலுமிச்சை சாறில் சுமார் 5% முதல் 6% சிட்ரிக் அமிலம் உள்ளது. மேலும் எலுமிச்சை சாறு தனித்துவமான புளிப்பு சுவை எலுமிச்சை பானம் போன்ற உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது.

எலுமிச்சை சாறு pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள் வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் உணவாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். ஊறுகாய், மருந்துகள், மிட்டாய் போன்ற பொருட்களை தயாரிக்கப் பயன்படுகின்றன. அதனைத் தொடர்ந்து நறுமண எண்ணெய்கள் தயாரிப்பிலும் சோப்பு தயாரிப்பிலும் எலுமிச்சை பயன்படுகிறது.எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பதால் செரிமான பாதையில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைக்க காலையில் சுடுநீரில் எலுமிச்சை சாறு செரிமான அமிலத்தின் உற்பத்தியும் சீராக இருக்கும். கல்லீரலில் உள்ள நொதிகளின் ஆற்றலை அதிகரித்து, கல்லீரலை வலிமையோடு வைத்துக் கொள்ளும்.

மேலும் குடல் இயக்கத்தை அதிகரித்து, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத் தடுக்கும். எலுமிச்சையில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் பெக்டின் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அதுமட்டுமின்றி, சுடு நீரில்  எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால், அது கலோரிகளின் அளவைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். நீங்கள் அடிக்கடி வயிற்றுப் பிரச்சனைகளால்  சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், அது வயிற்றில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும்.

சுடுநீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், அது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். மேலும் இதனை தொடர்ந்து ஒரு மாத காலம் பின்பற்றி வந்தால், அடிக்கடி சளி பிடிப்பதில் இருந்து விடுபடலாம்.

காலையில் எழுந்ததும் இயற்கை பானமான சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

Exit mobile version