Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நிம்மதியான உறக்கத்தை அனுபவிக்க இரவில் இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!! ஒரே நைட்டிலே ரிசல்ட் கிடைக்கும்!!

Just try this at night to enjoy a restful sleep!! Get results overnight!!

Just try this at night to enjoy a restful sleep!! Get results overnight!!

நிம்மதியான உறக்கத்தை அனுபவிக்க இரவில் இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!! ஒரே நைட்டிலே ரிசல்ட் கிடைக்கும்!!

இக்காலத்தில் பெரும்பாலானோருக்கு இருக்க கூடிய பிரச்சனை தூக்கமின்மை.இந்த பாதிப்பால் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர்.ஒவ்வொரு மனிதனுக்கும் ஓய்வு என்பது மிகவும் முக்கியம்.ஆனால் இன்றைய காலத்தில் உடல் உழைப்பு அதிகமாக இருக்கிறது.ஓய்வு என்ற ஒன்று போதிய அளவு கிடைக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.

இரவு நேரத்தில் மொபைல் பயன்படுத்திக் கொண்டு 12,1 மணி வரை தூங்காமல் இருப்பதால் மறுநாள் காலையில் உடல் சோர்வாகத் தொடங்கும்.இப்படியே உரிய நேரத்தில் இரவு தூக்கத்தை அனுபவிக்காமல் இருந்தால் காலப்போக்கில் தூக்கம் என்ற ஒன்று மறந்து விடும்.

தூக்கம் வராமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை தவறாமல் பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தீர்வு 01:-

ஒரு கிண்ணத்தில் 3 அன்னாசி பூ சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒரு நிமிடத்திற்கு கொதிக்க விட்டு வடிகட்டி இரவு நேரத்தில் குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

தீர்வு 02:-

ஒரு கப் அளவு சுரைக்காய் துண்டுகள் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி சில சொட்டு நல்லெண்ணெய் கலந்து இரவு நேரத்தில் அருந்தி வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

தீர்வு 03:-

ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் படுத்தவுடன் தூக்கம் வரும்.

தீர்வு 04:-

பாலில் ஒரு துண்டு பூண்டு மற்றும் சிட்டிகை அளவு சமையல் மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் நல்ல உறக்கம் கிடைக்கும்.

Exit mobile version